ஆசிரியர் சேவை யாப்புக்கு அமைவாக நீதிமன்ற நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னரே ஆசிரியர் நியமனங்கள் இடம்பெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான பிரதமருக்கும் பட்டதாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து பிரதமர் இவ்வாறுகுறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் (18) கல்வி அமைச்சில் நடைபெற்றது. நீதிமன்றச் செயல்முறை முடிந்தவுடன், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்புக்குள் மட்டுமே அனைத்து நியமனங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதன் காரணமாகவே பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி.
https://www.telonews.com/?p=145403

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *